வெற்றி உற்சாகத்தில் ஹெல்மேட்டை கீழே தூக்கி அடித்த அவேஷ் கான் - ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை
வெற்றி உற்சாகத்தில் ஹெல்மேட்டை கீழே தூக்கி அடித்த அவேஷ் கானுக்கு ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில், துப்பாட்டம் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் நிர்வாகம் எச்சரிக்கை
இப்போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் ஹெல்மெட்டை தூக்கி அவேஷ் கான் கீழே வீசினார். இந்நிலையில் லக்னோ அணி வீரர் அவேஷ் கானுக்கு ஐபிஎல் நிர்வாகம், நடத்தை விதிகளை மீறியதற்காக எச்சரிக்கை விடுத்துள்ளது.
Lmao, they removed the video. Here’s it, again. I can’t stop laughing at this ?#AveshKhan pic.twitter.com/iXOjMKaxTs
— Prateek (@Prateeeekkkkk) April 11, 2023