பெங்களூரு அணி தோல்வி: கதறி அழுத ரசிகை - வைரலாகும் வீடியோ!
பெங்களூரு அணி தோல்வியால், ரசிகை ஒருவர் கதறி அழுத வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெங்களூருவை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி
நேற்று இரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 15-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, லக்னோ சூப்பர் ஜெயன்ட்சை நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியில், துப்பாட்டம் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்களை எடுத்தது.
இதனையடுத்து, 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
வைரலாகும் ரசிகையின் அழுகை
இந்நிலையில், இணையதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பெங்களூரு அணி தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாமல் ரசிகை ஒருவர் கதறி அழுகிறார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்.
HaarCB fans crying is my source of happiness.
— Gaurav (@ImGS_08) April 10, 2023
Thank you Pooran ??♂️??#RCBvLSG pic.twitter.com/3x6wWlbQN1
The art The artist#RCBvLSG pic.twitter.com/a30UEZ3zVG
— VECTOR⁴⁵?️ (@Vector_45R) April 10, 2023
Karma hits Hard. I enjoy RCB fans tear my source of happiness give me joy ?? #RCBvLSG pic.twitter.com/WKpVLZ9wwh
— Nainaccyy (@Nainacyyy) April 10, 2023