சென்னையில் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் விற்பனை- கொளுத்தும் வெயிலில் குவிந்த ரசிகர்கள்
சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கியது. இதனையடுத்து, சேப்பாக்கத்தில் கொளுத்தும் வெயிலில் ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் வரும் 31-ம் தேதி முதல் மே 28-ம் தேதி வரை நடக்க உள்ளது.
ஐபிஎல் 2023 தொடரின் முதல் போட்டி மார்ச் 31ம் தேதி அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னையில் ஐ.பி.எல் டிக்கெட்டுகள் விற்பனை
இந்நிலையில், சென்னையில் நடக்கும் ஐ.பி.எல் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இப்போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்க அதிகாலையிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள்.
கொளுத்தும் வெயில் கூட பார்க்காமல் ரசிகர்கள் சென்னை சேப்பாக்கத்தில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுக்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். சென்னையில் 7 லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கான டிக்கெட் ரூ.1,500 முதல் ரூ.3,000 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
சென்னை எம்ஏ சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் இப்போட்டிகளுக்கான டிக்கெட்டுகளை PAYTM மற்றும் www.insider.in மற்றும் சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள 2 கவுண்டர்களில் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.