சேப்பாக்கம் CSK ரசிகர்களால் நிரம்பி வழிய போகிறது! மைக் ஹஸ்ஸி உற்சாகம்
2019 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிய போகிறது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
சேப்பாக்கம் நிரம்பி வழிய போகிறது
சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி பேசிய போது, 2019 ம் ஆண்டுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளோம்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மைதானத்தில் சென்னை அணி களமிறங்க இருப்பதால் முதல் ஆட்டத்தில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழியும் என்பது உறுதி.
எனவே இந்த சூழல் மிகவும் அருமையாக உள்ளது, அனைத்து வீரர்களும் உற்சாகமாக உள்ளனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் உள்ளூர் ரசிகர்கள் மத்தியில் விளையாடுவதை பென் ஸ்டோக்ஸ் நிச்சயம் விரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.
பென் ஸ்டோக்ஸ் காயம்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக சென்னை வந்து இறங்கிய பென் ஸ்டோக்ஸ், தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
Stoked in Yellow and Blue!?#WhistlePodu #Yellove ? pic.twitter.com/9zXp4JJk9A
— Chennai Super Kings (@ChennaiIPL) March 26, 2023
இந்நிலையில் பென் ஸ்டோக்ஸ்-க்கு இடது கால் முட்டியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக, ஐபிஎல் 2023 சீசனின் தொடக்க ஆட்டங்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச மாட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி தெரிவித்துள்ளார்.
அத்துடன் பேஸ்ட்மேனாக மட்டுமே பென் ஸ்டோக்ஸை பயன்படுத்த போவதாகவும் ஹஸ்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.