ருத்ர தாண்டவம் ஆடிய CSK பேட்ஸ்மேன்கள்! கொல்கத்தாவை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தாவை பந்தாடிய சென்னை வீரர்கள்
கொல்கத்தா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை ஆரம்பம் முதலே பந்தாட தொடங்கினர்.
Rampaging #AjinkyaRahane powers #ChennaiSuperKings to top spot as #KolkataKnightRiders lose four on the trot
— TOI Sports (@toisports) April 23, 2023
Match report ? https://t.co/yVyY6qzrid#IPL2023 #KKRvCSK #KKRvsCSK | Match 33 pic.twitter.com/xa9YrtYqqZ
தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 20 பந்துகளில் 2 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 35 ஓட்டங்களும், கான்வே 40 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் விளாசி 56 ஓட்டங்களும் குவித்தனர்.
அத்துடன் பின்னர் வந்த ரஹானே-வும் 29 பந்துகளில் 6 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் விளாசி 71 ஓட்டங்கள் அதிரடியாக குவித்தார். மறுப்புறம் வானவேடிக்கை காட்டிய சிவம் துபே 21 பந்துகளில் 2 பவுண்டரிகள் 5 சிக்சர்கள் பறக்கவிட்டு 50 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது.
வெற்றியை லாபகமாக கைப்பற்றிய சென்னை
இந்நிலையில் இமாலய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெகதீசன்(1 ஓட்டங்களுடனும்) சுனில் நரைன் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும் வெளியேறினர்.
பின்னர் வந்த வெங்கடேஷ் ஐயர் 20 ஓட்டங்களுடனும், கேப்டன் நிதிஷ் ராணா 27 ஓட்டங்களுடனும் வெளியேறினர். இக்கட்டான நிலையில் களமிறங்கிய ஜேசன் ராய் மற்றும் ரிங்கு சிங் அணியை தோல்வியில் இருந்து மீட்டெடுக்க கடுமையாக போராடினர்.
Jump off the chair x3️⃣
— KolkataKnightRiders (@KKRiders) April 23, 2023
⬆️ This was us! What were you doing when @JasonRoy20 took off? ??pic.twitter.com/L7X5bTiv6G
ஜேசன் ராய் அதிரடியாக விளையாடி 26 பந்துகளில் 5 பவுண்டரி 5 சிக்சர்கள் விளாசி 61 ஓட்டங்களும், ரிங்கு சிங் 33 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 53 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இருப்பினும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது.
இதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
#IPL2023 #KKRvCSK #KKRvsCSK | Match 33
— TOI Sports (@toisports) April 23, 2023
It's all over at the Eden Gardens in Kolkata#ChennaiSuperKings (235/4) beat #KolkataKnightRiders (186/8) by 49 runs to move to top of the table
Maheesh Theekshana 2/32
Tushar Deshpande 2/43
As it happened: https://t.co/ZAar92FRc3 pic.twitter.com/tBu1M1DqSL