126 ஓட்டங்களுக்கு சுருண்ட குஜராத் அணி: மிரட்டலான பந்து வீச்சால் டெல்லி அபார வெற்றி
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த டெல்லி
ஐபிஎல்-லின் 44வது லீக் போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் இன்று மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் உப்பு ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும், வார்னர் 2 ஓட்டங்களுடனும் வெளியேறி அதிர்ச்சி தந்தனர்.
பின்னர் வந்த பிரியம் கார்க், ரோசோவ், மற்றும் மணீஷ் பாண்டே ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் அணி மிகவும் தடுமாற்றத்தை சந்தித்தது.
ஆனால் அமன் ஹக்கீம் கான் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 51 ஓட்டங்கள் சேர்த்தார், இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 130 ஓட்டங்கள் குவித்தது.
125 ஓட்டங்களில் சுருண்ட குஜராத் அணி
131 ஓட்டங்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மட்டும் 59 ஓட்டங்கள் குவித்தார்.
Was this the moment when the game turned in @DelhiCapitals' favour?
— JioCinema (@JioCinema) May 2, 2023
Describe using just ☝️ emoji!#IPLonJioCinema #TATAIPL #IPL2023 #DelhiCapitals pic.twitter.com/ZzNfiP0G3c
ஆனால் மற்ற வீரர்கள் யாரும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து வெறும் 125 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்தது.
இதனால் இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த போட்டியில் 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சாளர் முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
A resounding away victory for @DelhiCapitals ??#DC was full of belief tonight and they register a narrow 5-run win in Ahmedabad ????
— IndianPremierLeague (@IPL) May 2, 2023
Scorecard ▶️ https://t.co/VQGP7wSZAj#TATAIPL | #GTvDC pic.twitter.com/GWGiTIshFY