டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு பொருட்கள் மாயம்
டெல்லி அணி வீரர்களின் விளையாட்டு பொருட்கள் திருடு போயுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
டெல்லி அணி தோல்வி
சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. டெல்லி அணி தொடர்ச்சியாக 5-வது முறையாக தோல்வியடைந்துள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விளையாட்டு பொருட்கள் மாயம்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் டேவிட் வார்னர், மிஷல் மார்ஸ், பிலிப் சால்ட் உள்பட சிலரின் 16 பேட்டுகள், கிளவுஸ், ஷூ உள்ளிட்ட கிரிக்கெட் கிட் பேக்கிலிருந்து காணாமல் போயுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று வீரர்களின் உடமைகள் அவர்களுக்கு கிடைத்தபோது பொருட்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.