RCB கோட்டையில் சாதனை படைத்த தோனி!
ஆர்சிபி கோட்டையான சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
தோனியின் கடைசி ஆட்டம்
தோனியைப் பொறுத்தவரை இந்த ஐபிஎல் போட்டி அவருக்கு கடைசி தொடராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வெற்றி கோப்பையுடன் ஐபிஎல் உள்ளிட்ட அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் விடை கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
முதலிடத்தில் தோனி
இன்று ஐபிஎல் தொடரில் தென்னிந்தியாவின் மிக முக்கிய அணிகளாக உள்ள சென்னை - பெங்களூரு இடையிலான ஆட்டம் இரவு நடைபெற இருக்கிறது. இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இப்போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சக்கட்டத்தில் இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் 4 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி மற்றும் 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை எடுத்து புள்ளிப் பட்டியலில் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ஓட்டங்கள் விளாசிய இந்திய வீரர்களில் சென்னை அணியின் கேப்டன் தோனி முதலிடத்தில் இருந்து வருகிறார்.
சாதனைகள் படைத்த தோனி
ஆர்சிபியின் கோட்டையான சின்னசாமி மைதானத்தில் 10 போட்டிகளில் தோனி விளையாடி உள்ளார். இந்த போட்டிகளில் தோனி 5 அரைசதங்கள் உட்பட 463 ஓட்டங்களை விளாசி இருக்கிறார்.
பெங்களூரு அணிக்கு எதிராக 31 போட்டிகளில் விளையாடியுள்ள தோனி இதுவரை 838 ஓட்டங்களை குவித்திருக்கிறார். அதேபோல் RCB அணிக்கு எதிராக அதிக ஓட்டங்களை விளாசியுள்ள இந்திய வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார்.
சின்னசாமி மைதானம் என்றாலும், தல தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால் RCB ரசிகர்களுக்கு இணையாக சென்னை அணியின் ரசிகர்களும் நிச்சயம் குவிந்து விடுவார்கள்.