ஐபிஎல் இறுதிப்போட்டியில் சைகை காட்டி சிக்கலில் சிக்கிய ஜெய்ஷா - நடந்தது என்ன?
ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா தவறான சைகை காட்டி சிக்கலில் சிக்கியுள்ளார்.
சிஎஸ்கே வெற்றி
கடந்த 29ம் தேதி ஐபிஎல் இறுதிப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை அணியும், குஜராத் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. அனல் தெறித்த இப்போட்டியில் ரசிகர்கள் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
@JayShah
சைகை காட்டி சிக்கலில் சிக்கிய ஜெய்ஷா
இந்நிலையில், பிசிசிஐ செயலாளர் பதவியில் உள்ள ஜெய்ஷா தற்போது சைகை செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதாவது, ஐபிஎல் இறுதிப்போட்டி நடந்துக் கொண்டிருக்கையில், சென்னை அணி 3 பந்துகளில் 11 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
அப்போது, குஜராத் அணி வெற்றியை நெருங்கிக்கொண்டிருக்கையில், மைதானத்தில் இருந்த ஜெய்ஷா ஆபாசமாக ஒரு சைகை செய்தார்.
அவர் சைகை செய்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதைப் பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் பொங்கி எழுந்துள்ளனர். ஜெய்ஷா குஜராத்தைச் சேர்ந்தவர். இப்படி பெரிய பொறுப்பில் இருக்கும் இவரே இப்படி செய்யலாமா? மும்பை, கொல்கத்தா போன்ற வரலாற்று சிறப்புமிக்க மைதானங்கள் இருந்தாலும் ஏன் அகமதாபாத் மைதானத்திற்கு பிசிசிஐ முக்கியத்துவம் கொடுக்கிறது. ஏனென்றால் ஜெய்ஷா குஜராத்தைச் சேர்ந்தவர் அதனால்தானோ என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.
இருந்தாலும், சிஎஸ்கே வெற்றி பெற்றவுடன் எழுந்து நின்று ஜெய்ஷா கைத்தட்டி வரவேற்றார். மேலும், தனது டுவிட்டர் பக்கத்தில் சிஎஸ்கேவிற்கு பாராட்டையும் தெரிவித்திருந்தார்.