மற்ற அணிகளுடன் CSK-வை ஒப்பிடாதீர்கள்! ருத்துராஜ் கெய்க்வாட் கருத்து
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான கலவையில் உள்ளது என CSKவின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளுக்கு பிறகு
ஐபிஎல்-லின் 16 வது சீசன் மார்ச் 31ம் திகதி தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி எதிர்கொள்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி இருந்தது.
PTI
இந்நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் 4 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் உள்ள அதன் சொந்த மைதானத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
ருத்துராஜ் கெய்க்வாட் பேட்டி
இதற்கிடையில் CSKவின் நட்சத்திர வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் அளித்துள்ள பேட்டியில், ஐபிஎல் போட்டிகளுக்கான ஆடுகளங்கள் பேட்டிங்குக்கு சாதகமாக உள்ளன.
VIJAY SONEJI
அத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சரியான கலவையில் உள்ளது, எனவே மற்ற அணிகளுடன் CSK-வை ஒப்பிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 4 ஆண்டுகளுக்கு பிறகு எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் விளையாட இருப்பதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்றும் ருத்துராஜ் குறிப்பிட்டுள்ளார்.