ஐபிஎல் 2023 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகல்?
ஐபிஎல் 2023 தொடரிலிருந்து கேன் வில்லியம்சன் விலகியிருப்பதாக வெளியான தகலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐபிஎல் முதல் தொடரில் அசத்திய குஜராத் டைட்டன்ஸ்
ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த 16வது ஐபிஎல் தொடர் நேற்று அகமதாபாத்தில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் கோலாகமாக தொடங்கியது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை 178 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் 19.2 ஓவரில் 5 விக்கெட் இழந்து 182 ரன்கள் எடுத்து அசத்தியது. இதன் மூலம் சென்னையை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தில் குஜராத் அபார வெற்றி பெற்றது.
கேன் வில்லியம்சன் காயம்
முதலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ருத்துராஜ் கெய்க்வாட் போட்டியின் 13வது ஓவரில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்தார்.
அப்போது பறந்து வந்த பந்தை பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த கேன் வில்லியம்சன் பிடித்து உள்ளே தூக்கி போட்டு பவுண்டரிக்கு வெளியே குதித்தார். அப்போது, அந்த பந்தை பிடிக்க முயற்சித்தபோது, வெளியே குதித்த கேன் வில்லியம்சனின் காலில் காயம் ஏற்பட்டு, எழுந்து நிற்கக்கூட முடியாமல் அங்கேயே படுத்துவிட்டார்.
இதனையடுத்து, பிசியோ அணியினர் மைதானத்திற்குள் ஓடி வந்தனர். கேன் வில்லியம்சனை பரிசோதனை செய்தனர். அவர் காலில் காயம் தீவிரமாக ஏற்பட்டதால் உடனடியாக அவரை அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றனர். ஆனால், கேன் வில்லியம்சன் நடக்க முடியாததால் தோளில் தாங்கியபடி வெளியே அழைத்துச் சென்றனர். இதனையடுத்து கேன் வில்லியம்சனை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கேன் வில்லியம்சன் விலகல்
மருத்துவமனையில் வில்லியம்சனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் செய்தனர். இந்த ஸ்கேன் முடிவகளின்படி கேன் வில்லியம்சன் காயம் குணமடைவதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என்று உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் 2023 சீசனிலிருந்து காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் விலகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Brilliant Effort By Kane Williamson?#cskvsgt #IPL2023 #iplopeningceremony #KaneWilliamson pic.twitter.com/1SOHWf9tSD
— Tanay (@tanay_chawda1) March 31, 2023
Reports emerged that Kane Williamson, who pulled out from Pakistan, SL (white-ball) tour due to IPL, will miss upcoming matches due to injury#IPL2023 pic.twitter.com/EJrTlXfNKR
— muzamilasif (@muzamilasif4) April 1, 2023