வருண் சக்கரவர்த்தியின் சுழலில் சிக்கிய RCB: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் த்ரில் வெற்றி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடனான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சீரான பேட்டிங்கை வெளிப்படுத்திய கொல்கத்தா
ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மோதின, இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜேசன் ராய் 29 பந்துகளில் 56 ஓட்டங்கள் குவித்தார், பின்னர் வந்த வெங்கடேச ஐயர் 26 பந்துகளில் 31 ஓட்டங்களும், கேப்டன் நிதிஷ் ராணா 21 பந்துகளில் 48 ஓட்டங்களையும் குவித்தனர்.
? evidence of #BengaluruRains tonight ?#RCBvKKR | #AmiKKR | #TATAIPL | @JasonRoy20 pic.twitter.com/RbF8BmddSJ
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2023
இதனால் கொல்கத்தா அணியால் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் குவிக்க முடிந்தது. பெங்களூர் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஹசரங்க 2 விக்கெட்டுகளையும், விஜயகுமார் வைஷாக் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தோல்வியை தழுவிய RCB
இதையடுத்து 201 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில், தொடக்க வீரர் மற்றும் கேப்டனான விராட் கோலி பொறுப்புடன் 54 ஓட்டங்கள் குவித்தார்.
He might not be our Impact Player tonight, but @venkateshiyer made quite an IMPACT with that catch! ?pic.twitter.com/oifQFJW6dB
— KolkataKnightRiders (@KKRiders) April 26, 2023
ஆனால் மற்ற முன்னணி வீரர்கள் டூ பிளெசிஸ்(17) ஷாபாஸ் அகமது(2) மேக்ஸ்வெல்(5) தினேஷ் கார்த்திக்(22) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் பெங்களூரு அணியால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போனது.
மஹிபால் லோமரோர் மட்டும் 18 பந்துகளில் 3 சிக்சர் மற்றும் 1 பவுண்டரி என விளாசி 34 ஓட்டங்கள் குவித்தார், அவரும் வருண் சக்கரவர்த்தி பந்தில் கேட்ச் கொடுத்து 11.3 வது ஓவரில் அவுட்டானர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் 8 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், ரஸ்ஸல் மற்றும் சுயாஷ் சர்மா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருந்தனர்.
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.