தூணாக நின்ற சுப்மன் கில்..!பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் த்ரில் வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்
ஐபிஎல்-லில் இன்று நடைபெற்ற 18வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணியில் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும், கேப்டன் தவான் 8 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
A last-over finish yet AGAIN! ? ?
— IndianPremierLeague (@IPL) April 13, 2023
It's the @gujarat_titans who hold their nerve against the spirited @PunjabKingsIPL ! ??
Scorecard ▶️ https://t.co/RkqkycoCcd #TATAIPL | #PBKSvGT pic.twitter.com/jYOqN5GBtK
ஆனால் பின்னர் வந்த மத்தேயு ஷார்ட் 24 பந்துகளில் 36 ஓட்டங்களும், ஜிதேஷ் சர்மா 23 பந்துகளில் 25 ஓட்டங்களும் குவித்து இருந்தனர்.
இதன்மூலம் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்கள் குவித்தனர்.
அசத்திய குஜராத் டைட்டன்ஸ்
154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரர் விருத்திமான் சாஹா 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்து இருந்த நிலையில் ரபாடா பந்துவீச்சில் வெளியேறினார்.
இருப்பினும் மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் 49 பந்துகளில் 67 ஓட்டங்கள் குவித்து இருந்த போது 20 வது ஓவரில் சாம் கர்ரன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
Back to winning ways ? @gujarat_titans pic.twitter.com/Npq3L7x77D
— hardik pandya (@hardikpandya7) April 13, 2023
மேலும் சாய் சுதர்சன் 19 ஓட்டங்களும், டேவிட் மில்லர் 17 ஓட்டங்களும் சேர்த்தனர். இதன் மூலம் குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இழக்கான 154 ஓட்டங்களை குவித்தது.
இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றுள்ளது.