108 ஓட்டங்களில் சுருண்ட லக்னோ: மிரட்டல் பந்துவீச்சால் RCB அபார வெற்றி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
முதல் பேட்டிங்
ஐபிஎல்-லின் 43வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய விராட் கோலி 31 ஓட்டங்களும், டூ பிளெசிஸ் 44 ஓட்டங்களும் குவித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
Fourth 5️⃣0️⃣ Partnership for Faf 🤝 Kohli
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 1, 2023
Keep ‘em coming! 😬#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #LSGvRCB pic.twitter.com/9lq6Pdp2cy
ஆனால் பின்னர் வந்த வீரர்கள் யாரும் ஒற்றை இலக்க ஓட்டங்களை தாண்டாததால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ஓட்டங்கள் மட்டுமே குவித்தனர்.
லக்னோ அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை நவீன் உல்-ஹக் 3 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய் மற்றும் அமித் மிஸ்ரா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
108 ஓட்டங்களுக்கு சுருண்டது லக்னோ
இதையடுத்து சற்று எளிய இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்து இருந்தது.
தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் ஓட்டங்கள் எதுவும் குவிக்காமலும், ஆயுஷ் பதோனி 4 ஓட்டங்களும் எடுத்து இருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியளித்தனர்.
4 down now! Game on 💪#PlayBold #ನಮ್ಮRCB #IPL2023 #LSGvRCB pic.twitter.com/3Rqemh4PUB
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 1, 2023
பின்னர் வந்த க்ருணால் பாண்டியா 14 ஓட்டங்களுக்கும், தீபக் ஹூடா 1 ஓட்டங்களுக்கும் வெளியேறினர்.
லக்னோ அணியில் அதிகபட்சமாக கிருஷ்ணப்பா கவுதம் 23 ஓட்டங்கள் குவித்து இருந்தார்.
லக்னோ அணி 19.5 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 108 ஓட்டங்களை மட்டுமே குவித்ததால், இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
Victory in Lucknow for @RCBTweets!
— IndianPremierLeague (@IPL) May 1, 2023
A remarkable bowling performance from #RCB as they bounce back in style 👏🏻👏🏻
Scorecard ▶️ https://t.co/jbDXvbwuzm #TATAIPL | #LSGvRCB pic.twitter.com/HBDia6KEaX
பெங்களூரு அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் கர்ண் சர்மா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர்.