தவறு செய்தாலும் பரவாயில்லை... எந்த வீரரையும் மாற்ற தேவையில்லை - ரோகித் சர்மா
தவறு செய்தாலும் பரவாயில்லை, எந்த வீரரையும் மாற்ற தேவையில்லை என்று மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2023 போட்டி
10 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ரோகித் சர்மா ஓபன் டாக்
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியையும் மும்பை அணி பதிவு செய்தது. இதனையடுத்து, இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது அவர் கூறுகையில்,
முதல் போட்டியிலிருந்தே எங்கள் அணி வெற்றிக்காக கடினமாக உழைத்து வருகிறது. எங்களுடைய முதல் வெற்றி ஸ்பெஷலாக அமைந்துள்ளது. சமீபத்தில் டெல்லி மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆடினோம். மைதானத்தில் பிட்ச் வேறு மாதிரியாக இருந்தது.
பவர் பிளே ஓவர்களை பயன்படுத்துவதே என் திட்டமாக இருந்தது. திலக் வர்மாவுடன் சிறந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக அமைந்தது. மும்பை அணியில் ஐபிஎல் அனுபவமில்லாத பல வீரர்கள் உள்ளனர். அதனால் அவர்கள் திறன் மீது நம்பிக்கை வைப்பது முக்கியமாக இருக்கிறது.
அதேபோல் ஓய்வறையிலும் சிறந்த அனுபவத்தை கொடுக்க முயற்சி செய்து வருகிறோம். அனுபவம் இல்லாத வீரர்கள் சில போட்டிகளில் தவறு செய்தாலும், உடனடியாக மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன் என்றார்.