மைதானத்திற்குள் திடீரென நுழைந்து விராட் கோலியிடம் ஆசீர்வாதம் வாங்கிய ரசிகர்!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மைதானத்திற்குள் திடீரென நுழைந்து, விராட் கோலியிடம் ரசிகர் ஒருவர் ஆசீர்வாதம் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
முத்தங்களை பறக்க விட்டு மாஸ் காட்டிய விராட்கோலி
ஐபிஎல் தொடரின் 43வது லீக் ஆட்டத்தில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியின் முடிவில் லக்னோ அணியை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி அபார வெற்றி அடைந்தது. நேற்று பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் வெறித்தனத்தோடு விராட் கோலி மாஸ் காட்டி ஆடினார்.
லக்னோ வீரர் க்ருனால் பாண்டியா அடித்த பந்தை கேட்ச் பிடித்த விராட் கோலி முத்தங்களை பறக்க விட்டு மைதானத்தை அதிர வைத்தார்.
கடந்த முறை நடந்த போட்டியில், கவுதம் கம்பீர் பெங்களூரு அணி ரசிகர்களை பார்த்து வாயில் விரல் வைத்து சத்தம் போடாதீங்க என்று செய்கை செய்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் விராட் கோலி நேற்றைய ஆட்டத்தில் யாரும் அமைதியாக இருக்காதீங்க.. சத்தம் எழுப்புங்க... என்று செய்கை செய்து முத்தங்களை பறக்க விட்டார்.
விராட் கோலியின் செய்கையைப் பார்த்த அவரது ரசிகர்கள் மைதானத்தில் ஆரவாரம் செய்து கைகளை தட்டி உற்சாகமடைந்தனர்.
mufaddal_vohra
விராட் கோலியிடம் ஆசீர்வாதம் வாங்கிய ரசிகர்
இப்போட்டியின் இடையே விராட் கோலியின் ரசிகர் ஒருவர் தடுப்புகளை மீறி மைதானத்திற்குள் உள்ளே நுழைந்தார். அப்போது விராட் கோலியை நோக்கி ஓடிய அவர் விராட்கோலியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்.
இதன் பின் விராட் கோலி ரசிகர்களிடம் ஏதோ சொல்ல, ரசிகர்கள் உற்சாகமாக துள்ளி குதித்து மைதானத்தை விட்டு வெளியேறினார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விராட் கோலியின் ரசிகர்கள் அசந்து போய் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Someone breached the fences and went onto to meet Kohli #LSGvsRCB full video pic.twitter.com/8QG0SkN2vz
— Punished Drainer (@DrainerPunished) May 1, 2023