விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு - ஐபிஎல் நிர்வாகம் அதிரடி
விதியை மீறியதாக விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
விராட் கோலிக்கு அபராதம் விதிப்பு
நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இப்போட்டியின் முடிவில், இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது.
இதனையடுத்து களத்தில் இறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது. இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 3-வது முறையாக வெற்றி பெற்றது.
இந்நிலையில், சென்னை அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் விதிகளை மீறியதாக பெங்களூரு வீரர் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது.
அதாவது, சென்னை வீரர் ஷிவன் துபேவின் விக்கெட்டை வீழ்த்திய போது, விராட் கோலி ஆக்ரோஷமாக கொண்டாடினார். இது ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவின் கீழ் 2.2 ஐ மீறியதாக சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, விராட் கோலிக்கு போட்டியின் ஊதியத்திலிருந்து 10% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.