IPL 2024: இறுதி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்ட BCCI
2024 ஆம் ஆண்டுக்கான IPL போட்டிகளின் முழு போட்டியின் அட்டவணையையும் BCCI வெளியிட்டுள்ளது.
இறுதி போட்டிக்கான அட்டவணை
2024 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் மார்ச் 22 ஆம் திகதி ஆரம்பமாகியது.
முதல் போட்டியில் CSK மற்றும் RCB அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதிய போது, சென்னை அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருப்பதால் போட்டி அட்டவணை வெளியிடுவதில் சிரமம் ஏற்பட்டது.
எனவே BCCI முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை மாத்திரமே வெளியிட்டது.
அதாவது மார்ச் 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7ஆம் திகதி வரையில் வெளியிடப்பட்டிருந்தது.
ஏப்ரல் 7 ஆம் திகதிக்கு பின்னரான போட்டிகள் இந்தியாவில் நடைபெறுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் இருந்தது. அதை தீர்க்கும் விதமாக அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடைபெறும் என BCCI செயலாளர் ஜெய்ஷா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இறுதி போட்டிகான அட்டவணையையும் BCCI வெளியிட்டுள்ளது.
? NEWS ?
— IndianPremierLeague (@IPL) March 25, 2024
BCCI announces the full schedule of #TATAIPL 2024 ?️
The remainder of the schedule has been drawn up, factoring in the polling dates and venues for the upcoming Lok Sabha Elections across the country.
Check out the schedule here ?
இறுதிப்போட்டி மே 26 ஆம் திகதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
மேலும் முதல் தகுதிச் சுற்று போட்டிகள் அகமதாபாத்தில் மே 21, 22 ஆம் திகதிகளிலும், இரண்டாவது தகுதி சுற்று போட்டியானது மே 24 திகதியும் இறுதி போட்டி 26 ஆம் திகதியும் நடைபெறவுள்ளதாக அட்டவணையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு போட்டிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |