"விசில் போடு" களத்தில் இறங்கிய சென்னை அணியின் ராஜா - ஆரவாரத்தில் ரசிகர்கள்
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரில் சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சென்னையை வந்தடைந்துள்ளார்.
சென்னை அணியின் ராஜா
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
IPL 2024 சீசனின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
மற்ற போட்டிகள் குறித்த அறிவிப்புகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையடுத்து முதல் போட்டியில் சென்னை அணியும் பெங்களூரு அணியும் மோதவுள்ளனர்.
அதற்கான முன்னாயத்த பயிற்சியில் வீரர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். ஆனால் ரவீந்திர ஜடேஜா கலந்துக்கொள்ளாமல் இருந்தமை ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் போட்டிகளுக்கு ஆயத்தமாகும் வகையில் சென்னை அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா சென்னையை வந்தடைந்துள்ளார்.
இது தொடர்பான புகைப்படத்தை சென்னை அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருவதோடு, ரசிகர்களுக்கு உற்சாகத்தில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |