IPL 2024: முதல் ஆட்டமே CSK vs RCB., டிக்கெட் விலை என்ன தெரியுமா?
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் இன்னும் ஆறு நாட்களில் தொடங்கவுள்ளது.
மார்ச் 22-ம் திகதி சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணிகள் மோதுகின்றன.
பழம்பெரும் வீரர்களான எம்எஸ் தோனியும் (MS Dhoni), விராட் கோலியும் (Virat Kohli) நேருக்கு நேர் மோதும் இந்த ஆட்டத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தோனியின் கடைசி சீசன் என்பதால், சிஎஸ்கே போட்டிகளின் டிக்கெட்டுகளுக்கு முழு கிராக்கி இருக்கும்.
ஐபிஎல் தொடங்குவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக மார்ச் 18 அன்று டிக்கெட்டுகள் கிடைக்கும்.
டிக்கெட் விலை ரூ. 1,700 முதல் ரூ.7,500 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
டிக்கெட் விலை பட்டியல்:
Stand: C/D/E Lower Rate: Rs 1700
Stand: I/J/K Upper Rate: Rs 4000
Stand: I/J/K Lower Rate: Rs 4500
Stand: C/D/E Upper Rate: Rs 4000
Stand: KMK Terrace Rate: Rs 7500
பதினாறாவது சீசனில் வெற்றி பெற்ற சென்னை ஐந்தாவது பட்டத்தை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஆனால், கேப்டன் தோனி தனது கேரியரின் 17வது சீசனுடன் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த ஆண்டும் தோனி கோப்பையுடன் விடைபெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், ஒரு முறைகூட சாம்பியன் ஆகாத ஆர்சிபி தனது முதல் பட்டத்தை வெல்லும் முயற்சியுடன் விளையாடவுள்ளது.