IPL 2024: 10 அணிகள் மற்றும் கேப்டன்களின் முழு விவரங்கள்
IPL 2024ன் 17வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் திகதி துவங்கவுள்ள நிலையில் அணிகள் மற்றும் கேப்டன்களின் விவரங்களை பார்க்கலாம்.
IPL 2024
இந்தியன் பிரீமியர் லீக் (IPL ) 2024ன் 17 வது சீசன் வருகின்ற மார்ச் 22ம் திகதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே தொடங்குகிறது.
இதில் ஏப்ரல் 7 -ம் திகதி வரை ஐபிஎல்லின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. மீதமுள்ள போட்டிகளை வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐபிஎல்லில் லீக் வடிவத்தில் பங்கேற்கும் 10 அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை ரவுண்ட் - ராபின் முறையில் மோதும்.
புள்ளிப்பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று 1 க்கு முன்னேறும். 3 மற்றும் 4 -வது இடத்தை பிடிக்கும் அணிகள் எலிமினேட்டரில் மோதும்.
இதில் தகுதிச் சுற்று 1 -ல் வெற்றி பெற்ற அணி நேரடியாக இறுதிசுற்றுக்கு செல்லும். தோல்வியடைந்த அணி எலிமினேட்டரில் வெற்றி பெற்ற அணியுடன் தகுதி சுற்று 2 -க்கு செல்லும். அதில் வெற்றிபெறும் அணி ஐபிஎல் 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் இரண்டாவது அணியாக மாறும்.
அணிகள் & கேப்டன்கள்
1. சென்னை சூப்பர் கிங்ஸ் - MS Dhoni (Chennai Super Kings)
2.டெல்லி கேபிடல்ஸ் - Rishabh Pant (Delhi Capitals)
3. குஜராத் டைட்டன்ஸ் - Subman Gill (Gujarat Titans)
4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - Shreyas Iyer (Kolkata Knight Riders)
5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - KL Rahul (Lucknow Supergiants)
6. மும்பை இந்தியன்ஸ் - Hardik Pandya (Mumbai Indians)
7. பஞ்சாப் கிங்ஸ் - Shikhar Dhawan (Punjab Kings)
8. ராஜஸ்தான் ராயல்ஸ் - Sanju Samson (Rajasthan Royals)
9. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - Faf du Plessis (RCB)
10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - Pat Cummins (Sunrisers Hyderabad)