சூறையாடிய சுனில் நரைன்: 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் KKR அபார வெற்றி!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளது.
பேட்டிங்கில் அதிரடி காட்டிய KKR
ஐபிஎல் 2024-ன் 54 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது.
The O in Stoinis stands for ???? ??? ????????? ? pic.twitter.com/ZZ5FzFBMOP
— Lucknow Super Giants (@LucknowIPL) May 5, 2024
சுனில் நரைன் (81 ஓட்டங்கள்), சால்ட் (32 ஓட்டங்கள்), ரகுவன்ஷி (32 ஓட்டங்கள்) என் குவித்து அணியை வலுவான விலைக்கு எடுத்து சென்றனர்.
தோல்வியை தழுவிய LSG
236 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய லக்னோ அணி 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.
லக்னோ அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் கே எல் ராகுல் (25 ஓட்டங்கள்), ஸ்டோய்னிஸ் (36 ஓட்டங்கள்) குவித்து இருந்தனர்.
Need wickets in the middle-overs?
— KolkataKnightRiders (@KKRiders) May 5, 2024
? Call Varun Da! pic.twitter.com/Loa9HRHEb5
கொல்கத்தா அணியின் பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா (3/ 24), வருண் சக்கரவர்த்தி (3 / 30), ஆண்ட்ரே ரஸல் (2 / 17) வீழ்த்தி அசத்தினர்.
ஐபிஎல் 2024-ன் 54 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு KKR முன்னேறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |