IPL 2024: பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் RCB., அதிர்ஷ்டம் வருமா?
IPL-ன் பதினேழாவது சீசனின் முதல் பாதி முடிந்தாலும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) எந்த சாதனையும் செய்யவில்லை.
ஏழில் 6 தோல்விகளால் ஏமாற்றமடைந்த பெங்களூரு அணி முக்கிய போருக்கு தயாராகி வருகிறது.
ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (Kolkata Knight Riders) அணிக்கு எதிராக பழிவாங்கும் மோதலுக்கு டுபிளெசிஸ் தலைமையிலான அணி தயாராகி வருகிறது.
இந்த போட்டியில் RCB வீரர்கள் புதிய ஜெர்சி அணிந்து விளையாடுவார்கள். ஆம், இந்த முறை சிவப்பு மற்றும் நீலத்திற்கு பதிலாக பச்சை நிற ஜெர்சியுடன் களம் இறங்கவுள்ளது பெங்களூர்.
கடந்த சீசன்களில் பச்சை நிற ஜெர்சியுடன் சாதனை படைத்த இந்த அணி, இம்முறையும் ஏதேனும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.
ஏன் பச்சை ஜெர்சி..?
ஆர்சிபி அணி பச்சை நிற ஜெர்சியில் விளையாடுவது இது முதல் முறை அல்ல. 2011-லிருந்து, இந்த ஜெர்சி ஒவ்வொரு சீசனிலும் ஒரு போட்டியில் விளையாடப்படுகிறது.
பச்சை நிற ஜெர்சி தேர்வுக்கு பின்னால் சுற்றுச்சூழல் செய்தி உள்ளது. ஆம், "Go Green" வாழ்க்கை முறையை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை காட்டுவதே இதன் நோக்கம்.
ஆர்சிபி வீரர்கள் பச்சை நிற ஜெர்சியுடன் செடிகளை நடவும், மரங்களை பாதுகாக்கவும், புவி வெப்பமடைவதை குறைக்கவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
கடந்த காலங்களில் பச்சை நிற ஜெர்சியில் விளையாடிய ஒவ்வொரு முறையும் பெங்களூரு வெற்றி பெற்றுள்ளது.
2016ல் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் விராட் கோலி ஆகியோர் சதம் அடித்து சாதனை படைத்தனர்.
டி வில்லியர்ஸ் 129 ஓட்டங்களும், கோஹ்லி 109 ஓட்டங்களும் குவித்து குஜராத் லயன்ஸ் அணியின் பந்துவீச்சை துவைத்தனர்.
அதன் மூலம் இம்முறையும் வெற்றி பெறுவோம் என்ற உணர்வில் டுபிளெசிஸ் அணி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Kolkata Knight Riders, Royal Challengers Bengaluru, RCB Vs KKR, RCB Green Jersey, Royal Challengers Bengaluru Green Jersey, IPL 2024