SRH vs KKR : நாளைய போட்டியில் வெற்றி வாகை சூட போகும் அணி எது தெரியுமா?
வெற்றிகரமாக நடைபெற்று வந்த IPL தொடர் நாளையுடன் முடிவுக்கு வரவுள்ளது.
இறுதிக்கட்ட போட்டியை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளனர்.
இந்த போட்டியில் எந்த அணி வெற்றிக்கோப்பையை எடுத்து செல்லப்போகின்றார்கள் என்பது சந்தேகத்தில் தான் உள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.
கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணி இரண்டு முறையும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணி ஒரு முறையும் IPL கோப்பையை வென்றுள்ளனர்.
நாளை பலப்பரீட்சை ஆரம்பம்
கடந்த செவ்வாய்க்கிழமை (21) அஹமதாபாத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடனான முதலாவது தகுதிகாண் போட்டியில் வென்ற கொல்கத்தா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
அதேபோன்று நேற்றிரவு (24) நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் றோயல்ஸ் அணிகளுக்கடையேயான இறுதிச் சுற்றின் மூன்றாவது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 36 ஓட்டங்களால் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி IPL இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது இது மூன்றாவது முறையாகும்.
மேலும் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் நாளை போட்டியை வென்று இரண்டாவது வெற்றிக்கோப்பையை கைப்பற்றுமா? அல்லது கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் இந்த முறை கோப்பையை கைப்பற்றுமா என ரசிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |