பட்டையை கிளப்பிய மிட்செல் ஸ்டார்க்! மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி
ஐபிஎல்-லில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ஓட்டங்களில் வீழ்த்தி கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் சீசனின் 51-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது.
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா அணியின் அதிரடி பேட்டிங்
முதலில் பேட்டிங் சென்ற கொல்கத்தா அணி, 19.5 ஓவர்களில் 169 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
தொடக்கத்தில் தடுமாறிய கொல்கத்தா அணிக்கு, வெங்கடேஷ் ஐயர் 70 ஓட்டங்களும் மற்றும் மணீஷ் பாண்டே 42 ஓட்டங்களும் குவித்து அணியை மிகப்பெரிய சரிவில் இருந்து மீட்டனர்.
Counter attack OP!
— Mumbai Indians (@mipaltan) May 3, 2024
Take a bow, SKY ?#MumbaiMeriJaan #MumbaiIndians #MIvKKR pic.twitter.com/nAqffXuqMA
மும்பை அணியின் தடுமாற்றம்
170 ஓட்டங்களை விரட்டிய மும்பை அணி, பனிப்பொழிவு காரணமாக எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு மும்பை அணியை 18.5 ஓவர்களில் 145 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் செய்தனர்.
மும்பை அணியில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 56 ஓட்டங்கள் குவித்தார்.
Mitchell Starc with the final wicket for @KKRiders ?
— IndianPremierLeague (@IPL) May 3, 2024
Watch the recap on @StarSportsIndia and @JioCinema ??#TATAIPL | #MIvKKR pic.twitter.com/aUz2emSPdV
மிட்செல் ஸ்டார்க் அபார பந்து வீச்சு
கொல்கத்தா அணி சார்பாக மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அபார பந்து வீச்சை வெளிப்படுத்தினார்.
வருண் சக்கரவர்த்தி, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரே ரஸல் ஆகியோரும் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதன் மூலம் நடப்பு ஐபிஎல் சீசனின் 51-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்களில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |