தோனியின் கடைசி ஐபிஎல்! 16 வருடங்களுக்கு முந்தைய லுக்
ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனுக்கான பயிற்சி முகாமை சிஎஸ்கே அணி இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
இந்த நிலையில் 42 வயதான தோனி தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருக்கிறார்.
இதற்காக ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்க உள்ளார்.
தோனி தற்போது தான் சிக்ஸர் அடிப்பதற்கும் கேப்டன்ஷிப் செய்வதற்கும் பிரபலமாக இருக்கிறார். ஆனால் தோனி முதல்முறையாக பிரபலமானது அவருடைய வித்யாசமான ஹேர் ஸ்டைலால் தான்.
அந்த காலத்தில் கிரிக்கெட் வீரர்கள் யாரும் நீளமாக முடி வைத்ததே கிடையாது. ஆனால் தோனி முதன் முதலாக தன்னுடைய வித்தியாசமான ஹேர் ஸ்டைலால் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
அதன் பிறகு தோனியின் பேட்டிங் திறமையாலும் விக்கெட் கீப்பிங் திறமையாலும் ரசிகர்கள் அவரை பின்தொடர்ந்தனர்.
இந்நிலையில் தோனி முடி உதிர்தல் பிரச்சனை இருக்கிறது என்று தன்னுடைய நீளமான முடியை வெட்டினார்.
தற்போது தன்னுடைய கடைசி கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளதால் ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த தோனி.
இதற்காக, தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைலை மீண்டும் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்.
ஐபிஎல் 17வது சீசனுக்கான பயிற்சி முகாமை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தொடங்கினார்.
தோனி தன்னுடைய பழைய ஹேர் ஸ்டைலில் களத்திற்கு வந்தவுடன் அங்கிருந்த மைதான ஊழியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
அது மட்டும் அல்லாமல் தோனி தன்னுடைய பேட்டிங் அதிரடியையும் பயிற்சி முகாமில் காட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |