ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர் தோல்வி: பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி!
ஐபிஎல் 2024 தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தொடர்ந்து நான்காவது போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
தடுமாறிய ராஜஸ்தான் ராயல்ஸ்
ஐபிஎல் 2024 தொடரில் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வியடைந்தது.
நாணய சுழற்சியில் வென்று பேட்டிங் தேர்வு செய்த ராஜஸ்தான் அணிக்கு துவக்கமே பின்னடைவாக அமைந்தது.
தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ஓட்டங்களிலும், கேப்டன் சாம்சன் 18 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
Some counter-attack from Ash in the middle with Riyan fighting till the end. Back us, Royals fam. 👊💗 pic.twitter.com/6HIYvW3HSq
— Rajasthan Royals (@rajasthanroyals) May 15, 2024
அஷ்வின் 28 ரன்கள் எடுத்து அணியை தற்காலிகமாக தாங்கி பிடித்தார்.
துருவ் ஜுரெல் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், ரோமன் பாவெல் 4 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழுந்தாலும், ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து அணியை சரிவிலிருந்து மீட்க போராடினார். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 144 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.
பஞ்சாப் அணி வெற்றி
145 ரன்கள் என்ற எளிதான இலக்கை நோக்கி பஞ்சாப் அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர்கள் பிரப்சிம்ரன் சிங் 6 ஓட்டங்களிலும், ஜானி பேர்ஸ்டோ 14 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ரிலீ ரூசோ 22 ஓட்டங்களிலும், ஷஷாங்க் சிங் ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர்.
Sadde 🦁s 𝑹𝑹oared! 🔥pic.twitter.com/A73vRp2ed5
— Punjab Kings (@PunjabKingsIPL) May 15, 2024
அதன்பின்னர் கேப்டன் சாம் கரன் 63 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
ஜிதேஷ் சர்மா 22 ஓட்டமும், அசுதோஷ் சர்மா 17 ஓட்டமும் எடுத்து பஞ்சாப் அணியின் வெற்றிக்கு உதவினர்.
இதன் மூலம் 18.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் பஞ்சாப் அணி இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் 2 வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி கடைசியாக விளையாடிய 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |