RCB ஹாட்ரிக் வெற்றி! 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி தோல்வி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 விக்கெட்டுகளால் த்ரில்லர் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஹாட்ரிக் வெற்றி பெற்ற ஆர்சிபி, புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தடுமாறிய குஜராத் டைட்டனஸ்
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 147 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.
குஜராத் அணியை பொறுத்தவரை ஷாருக்கான் (37 ஓட்டங்கள்), தெவாட்டியா (35 ஓட்டங்கள்), மில்லர் (30 ஓட்டங்கள்) ஆகியோர் குஜராத் அணிக்கு அதிக ஓட்டங்கள் எடுத்தனர்.
In bowlers, we trust! ?#AavaDe | #GTKarshe | #TATAIPL2024 | #RCBvGT pic.twitter.com/fQ51Kbajoi
— Gujarat Titans (@gujarat_titans) May 4, 2024
RCB அணி தரப்பில் சிராஜ், யஷ் தயாள் மற்றும் விஜயகுமார் வைஷாக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
துரத்தி பிடித்த RCB
148 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய ஆர்சிபி அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடியது. கேப்டன் டூப்ளசி 23 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் வில் ஜேக்ஸ், பட்டிதார், மேக்ஸ்வெல், கிரீன் ஆகியோர் பெரிய ஷாட் ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கோலி 47 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனால் ஆர்சிபி அணி இலக்கை எட்ட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இக்கட்டான சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் மற்றும் ஸ்வப்னில் சிங் ஆகியோர் 35 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆர்சிபி அணியை மீட்டனர்.
Struck as clean as a whistle and stood as a rock at one end! ?
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 4, 2024
Your consistency has been a class apart, Virat. ? #PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 #RCBvGT pic.twitter.com/YgHLHlqWHS
13.4 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்த ஆர்சிபி, தினேஷ் கார்த்திக் (21) மற்றும் ஸ்வப்னில் சிங் (15) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 11 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகள் பெற்ற ஆர்சிபி அணி, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்து ஏழாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |