IPL 2024: தொடர் தோல்வியில் இருந்து மீண்ட RCB: தடுமாறிய SRH
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் SRH-ஐ வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
பெங்களூரு அணியின் அதிரடி பேட்டிங்
நடப்பு ஐபிஎல் சீசனின் 41-வது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வென்ற RCB அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 206 ஓட்டங்கள் எடுத்தது.
Look between Q and E on your keyboard 😄 pic.twitter.com/uEB9Do4zaX
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 25, 2024
விராட் கோலி (51), ரஜத் பட்டிதார் (50), கேமரூன் கிரீன் (37) மற்றும் ஃபாப் டூப்ளெசி (25) ஆகியோர் அணியின் அதிகபட்ச ஓட்டங்களை எடுத்த வீரர்கள் ஆவர்.
ஹைதராபாத் தடுமாற்றம்
207 ஓட்டங்கள் என்ற இலக்கை விரட்டிய SRH அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஹெட் (1), அபிஷேக் சர்மா (31), மார்க்ரம் (7), கிளாசன் (4), நிதிஷ் ரெட்டி (14) மற்றும் ஷாபாஸ் அகமது (40) ஆகிய ஓட்டங்களில் ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
A valiant effort from 𝑪aptain 𝑪ummins 👏#PlayWithFire #SRHvRCB pic.twitter.com/sVgiE0ea4o
— SunRisers Hyderabad (@SunRisers) April 25, 2024
கேப்டன் கம்மின்ஸ் (31) மற்றும் புவனேஷ்வர் குமார் (13) ஓரளவு ஓட்டங்கள் சேர்த்தாலும், அது அணிக்கு வெற்றி பெற போதுமானதாக இல்லை.
இறுதியில் SRH அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து, 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |