அவர் தான் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த ஸ்டார்: CSK சிஇஓ காசி விஸ்வநாதன்
இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டாராக சமீர் ரிஸ்வி இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
8.40 கோடி ரூபாய்க்கு ஏலம்
2024ம் ஆண்டிற்கான ஐபிஎல் வீரர்கள் மினி ஏலம் கடந்த டிசம்பர் 19ம் திகதி நடைபெற்றது.
இந்த ஏலத்தில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 20 வயது இளம் வீரர் சமீர் ரிஸ்வி என்ற வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் சுமார் 8.4 கோடி ரூபாய்க்கு எடுத்தது.
சென்னை அணியில் அம்பாதி ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக சமீர் ரிஸ்வி-ஐ சென்னை அணி நிர்வாகம் வாங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.
சிஇஓ காசி விஸ்வநாதன் கருத்து
இந்நிலையில் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர்ஸ்டாராக சமீர் ரிஸ்வி இருப்பார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரலாற்றிலேயே இதுவரை ரூ.8.40 கோடி ரூபாய் கொடுத்து ஒரு இளம் வீரரை வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |