IPL 2024: முதல் போட்டியிலேயே மோதவுள்ள அந்த இரு அணிகள்- இணையத்தில் கசிந்த தகவல்
2024 ஆம் ஆண்டிற்கான IPL தொடரின் போட்டி அட்டவணை இன்று மாலை வெளியாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் இந்த இரண்டு அணிகள் தான் மோதவுள்ளதாக இணையத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
IPL 2024
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17வது சீசன் சென்னையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதால் திகதிகள் மற்றும் இடங்கள் குறித்து பல வாரங்களாக சந்தேகங்கள் இருந்தது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இறுதியாக ஒரு தீர்வை எடுத்துள்ளது.
2009ஆம் ஆண்டு இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது தென்னாப்பிரிக்காவில் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதன்பின் 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது ஒரு பாதி ஆட்டங்கள் ஐக்கிர அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது.
ஆனால் 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் போது அனைத்து போட்டிகளும் இந்தியாவிலேயே நடத்தப்பட்டது.
அதுப்போலவே 2024 ஆண்டு தேர்தல் இருப்பதால், இந்த ஆண்டுக்கான போட்டியும் நிச்சயமாக இந்தியாவிலேயே நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் நடத்த திட்டமிட்டுள்ள திகதிகள் குறித்து வெளியிடப்படாமல் இருப்பதால், IPL தொடருக்கான நேர அட்டவணை வெளியிடுவதில் தாமதம் இருந்தது.
எனவே மார்ச் 22 ஆம் திகதி போட்டிகள் தொடங்கப்பட்டு மே 26 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் முதல் 15 நாட்களுக்கான அட்டவணையை மட்டும் முதற்கட்டமாக வெளியிட உள்ளதாக பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் மீதமுள்ள போட்டிகள் தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து திட்டமிடப்பட இருக்கிறது.
போட்டிக்கான அட்டவணை இன்று மாலை 5 மணியளவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தில் கசிந்த தகவல்
மேலும் கடந்து ஆண்டு இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் முதலில் மோதலாம் என கூறப்படுகிறது.
தொடக்க விழாவையும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |