ஜாஸ் பட்லர் அதிரடி! பெங்களூரு மைதானத்தில் குஜராத் டைட்டன்ஸ் அதிரடி வெற்றி!
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அதிரடி வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய குஜராத் டைட்டன்ஸ்
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த பரபரப்பான போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் டைட்டன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனால் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, விராட் கோலி மற்றும் பில் சால்ட் ஆகியோரின் விக்கெட்டுகளை ஆரம்பத்திலேயே இழந்து தடுமாறியது.
A partnership that might just turn out to be a match-saving one for us! 👏
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 2, 2025
Early setbacks, tricky wicket, but they kept the runs flowing. We need a strong finish now! 👊#PlayBold #ನಮ್ಮRCB #IPL2025 #RCBvGT pic.twitter.com/yZW0d3le6U
குறிப்பாக, லிவிங்ஸ்டோன் 54 ஓட்டங்கள் குவித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
டிம் டேவிட் அதிரடியாக விளையாடி 32 ஓட்டங்கள் சேர்க்க, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி
170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியில், கேப்டன் கில் விரைவாக ஆட்டமிழந்தாலும், சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
ஜாஸ் பட்லர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 73 ஓட்டங்கள் குவித்தார்.
ரூதர்போர்ட் அதிரடியாக 30 ஓட்டங்கள் எடுக்க, குஜராத் டைட்டன்ஸ் அணி 17.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 170 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |