IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர்
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் வலது கை சுரேஷ் ரெய்னா என அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி-யை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்டுள்ளது.
ஏலத்தில் கலக்கிய CSK
2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று தொடங்கியது.
இரண்டு நாட்கள் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், முதல் நாளான இன்று ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் பலர் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.
அதே போல ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து நட்சத்திர வீரர்களை தனது வசமாக்கி CSK ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளியுள்ளது.
சிஎஸ்கே அணி, கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், கலீல் அகமது, ராகுல் திரிபாதி, நூர் அகமது போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் சரியான விலைக்கு எடுத்து மிரட்டியுள்ளது.
சமீர் ரிஸ்வி-வை தவறவிட்ட CSK
ஏலத்தில் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரை சென்னை அணி சிறப்பான விலைக்கு எடுத்து இருந்தாலும், கடந்த சீசனில் CSK அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வியை விட்டுக் கொடுத்துள்ளது.
"வலது கை சுரேஷ் ரெய்னா" என்று அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளார்.
அவரது இளம் வயது மற்றும் திறமையைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வீரராக அவர் பார்க்கப்பட்டார்.
இருப்பினும் அவரை ஏலத்தில் தக்க வைக்க சிஎஸ்கே முன்வராதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடக்கத்தில் சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே 90 லட்சம் வரை ஆர்வம் காட்டியது. ஆனால், டெல்லி அணி அவரை 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
இந்த நிலையில்,1 கோடி ரூபாய் இருபது லட்சம் கொடுத்து தமிழக வீரர் விஜய் சங்கரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |