படுதோல்வியை சந்தித்தது CSK! ருத்ர தாண்டமாடிய ரோகித், சூர்யகுமார்: MI அபார வெற்றி
மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பந்தாடி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஐபிஎல் 2025: மும்பை vs சென்னை
நடப்பு ஐபிஎல் 2025 தொடரின் பரபரப்பான 37-வது லீக் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
மும்பை வான்கடே மைதானத்தில் இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
GGWP AYUSH! 👏🏻💛#MIvCSK #WhistlePodu 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025
pic.twitter.com/RhBoW6Ikjo
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் மிகப்பெரிய ஏமாற்றமளித்தது.
தொடக்க ஆட்டக்காரர்களான ஷேக் ரஷீத் (19 ஓட்டங்கள் மற்றும் ரச்சின் ரவீந்திரா (5 ஓட்டங்கள்) என விரைவாக ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தனது அதிரடியான ஆட்டத்தால் 15 பந்துகளில் 32 ஓட்டங்கள் குவித்தார்.
1⃣0⃣0⃣ 🆙
— Chennai Super Kings (@ChennaiIPL) April 20, 2025
Fire 🆙 some whistles! 🥳#MIvCSK #WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/y6O9XiH98F
பின்னர் களமிறங்கிய அனுபவ வீரர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் அரை சதம் அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள் எடுத்தது.
அபார வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ்
177 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. இருப்பினும், தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு, ரோஹித் சர்மா இந்த சீசனில் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
Hope your Sunday was as good as ours Mumbai 💙 pic.twitter.com/n3QwR8ViXp
— hardik pandya (@hardikpandya7) April 20, 2025
ரோஹித் சர்மா 45 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 76 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
அவருக்கு பக்கபலமாக ஆடிய சூர்யகுமார் யாதவ்-வும் தனது பங்கிற்கு 30 பந்துகளில் 68 ஓட்டங்கள் விளாசினார்.
இறுதியில், மும்பை இந்தியன்ஸ் அணி 15 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |