CSK-வின் போராட்டம் வீண்! 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அசத்தல் வெற்றி
ஐபிஎல்-லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போராடி தோல்வியை தழுவியுள்ளது.
ப்ரியன்ஷ் ஆர்யா அதிரடி
ஐபிஎல் தொடரின் 22-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரரான ப்ரியன்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 103 ஓட்டங்கள் குவித்து அசத்தியதுடன் தனது முதல் சதத்தையும் பூர்த்தி செய்தார்.
மறுமுனையில் விக்கெட்டுகள் சரசரவென சரிந்தாலும் 6 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷஷாங்க் சிங் பொறுப்புடன் விளையாடி 52 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதன் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ஓட்டங்கள் குவித்தது.
சிஎஸ்கே போராட்டம் வீண்!
220 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ரச்சின் ரவீந்திரா மற்றும் டெவோன் கான்வே சிறப்பான தொடக்கத்தை அமைத்தனர்.
ரச்சின் 23 பந்துகளில் 36 ஓட்டங்கள் எடுத்தார். கான்வே அதிரடியாக ஆடி 69 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் வந்த ஷிவம் துபே 42 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை அளிக்க, நட்சத்திர வீரர் எம்.எஸ். தோனி 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 27 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை போராடினார்.
இருப்பினும் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்த தோல்வியின் மூலம் சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 தொடரில் தனது நான்காவது தோல்வியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |