RCB vs KKR போட்டி மழையால் ரத்து! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஐபிஎல்-லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மீண்டும் தொடங்கிய ஐபிஎல்
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் காரணமாக முன்னதாக மே 8-ஆம் தேதி இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன.
ஒரு வாரத்திற்குப் பிறகு, மே 17-ஆம் திகதி போட்டிகள் மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதியடைந்தனர்.
இதையடுத்து இன்று, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிகளுக்கு இடையிலான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி நடைபெற இருந்தது.
மழையால் ரத்தான போட்டி
இருப்பினும், பெங்களூருவில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாணய சுழற்சி செய்வதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியில் ரசிகர்களுக்கும் அணிகளுக்கும் வருத்தமளிக்கும் விதமாக, மழை விடாமல் பெய்ததால் போட்டி இறுதியில் கைவிடப்பட்டது.
இதன் விளைவாக, RCB மற்றும் KKR ஆகிய இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
Disappointed!
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 17, 2025
Could only share a point each tonight. 🌧️ pic.twitter.com/KDmLttqprz
அத்துடன் போட்டி தடைப்பட்டு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
அதே நேரத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்தது.
இதற்கு முன்பு, சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |