மே 17 முதல் மீண்டும் IPL போட்டிகள் தொடரும் - புதுப்பிக்கப்பட்ட அட்டவணை இதோ...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றத்தால் இடைநிறுத்தப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மே 17 முதல் மீண்டும் தொடங்கவுள்ளது.
BCCI மற்றும் IPL நிர்வாக குழு இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மீதி போட்டிகள் சிறப்பு பாதுகாப்பு காரணமாக 6 இடங்களிலேயே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
ஆனால் பிளேஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான இடங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
புதுப்பிக்கப்பட்ட IPL 2025 போட்டிகள் அட்டவணை:
மே 17: RCB vs KKR (பெங்களூரு)
மே 18: RR vs PBKS (ஜெய்ப்பூர்), DC vs GT (தில்லி)
மே 19: LSG vs SRH (லக்னோ)
மே 20: CSK vs RR (தில்லி)
மே 21: MI vs DC (மும்பை)
மே 22: GT vs LSG (அஹமதாபாத்)
மே 23: RCB vs SRH (பெங்களூரு)
மே 24: PBKS vs DC (ஜெய்ப்பூர்)
மே 25: GT vs CSK (அஹமதாபாத்), SRH vs KKR (தில்லி)
மே 26: PBKS vs MI (ஜெய்ப்பூர்)
மே 27: LSG vs RCB (லக்னோ)
மே 29: Qualifier 1 – இடம் அறிவிக்கப்படும்
மே 30: Eliminator - இடம் அறிவிக்கப்படும்
ஜூன் 1: Qualifier 2 – இடம் அறிவிக்கப்படும்
ஜூன் 3: இறுதி போட்டி - இடம் அறிவிக்கப்படும்
இந்த ஆண்டு IPL தொடரின் மீதியுள்ள பகுதிகள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமான அணிகள் மோதும் இப்போட்டிகள், சிறப்பான ஆட்டங்களுடன் துவங்கவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IPL 2025 new schedule, IPL 2025 Resumes May 17, IPL 2025 revised schedule, IPL 2025 new match dates, IPL 2025 restart date, IPL playoffs 2025, IPL 2025 venues, IPL final 2025 date, BCCI IPL 2025 update, IPL match list May 2025, IPL postponed matches resumed, IPL latest schedule 2025