IPL 2025: லக்னோ அணியின் கேப்டனாக ரிஷப் பன்ட் நியமனம்
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் புதிய கேப்டனாக ரிஷப் பன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்னோ (Lucknow Super Giants) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பன்ட்டை கேப்டனாக அறிவித்தார்.
"பன்ட்டில் ஒரு பிறவி தலைவரை நான் காண்கிறேன். அவர் ஒரு மகத்தான தலைவர். அவர் ஐபிஎல்லில் சிறந்த கேப்டனாக வருவார் என்று நான் நினைக்கிறேன்" என்று சஞ்சீவ் கோயங்கா கூறியுள்ளார்.
"ஐபிஎல்லின் வெற்றிகரமான கேப்டன்கள் பட்டியலில் 'மஹி (தோனி), ரோஹித்' ஆகியோரை மக்கள் வைக்கிறார்கள். எனது வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள், 10-12 ஆண்டுகளுக்குப் பிறகு அது 'மஹி, ரோஹித் மற்றும் ரிஷப் பந்த்' ஆக இருக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மெகா ஏலத்தில் இருந்து, பன்ட்டை லக்னோ அணியின் கேப்டனாக்குவது குறித்து பேச்சு எழுந்தது.
கடந்த நவம்பரில் நடந்த IPL மெகா ஏலத்தில் பன்ட்டை ரூ.27 கோடிக்கு லக்னோ வாங்கியது. இதன் மூலம், ஐபிஎல்லின் மிகவும் விலையுயர்ந்த வீரர் ஆனார் பன்ட்.
ரிஷப் பன்ட் இதற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணியை மூன்று சீசன்களில் (2021, 2022 மற்றும் 2024) வழிநடத்தியுள்ளார், இருப்பினும் அவரது தலைமையின் கீழ், அணி 2021 பிளேஆஃப்களை எட்டியது.
கார் விபத்துக்குப் பிறகு அவர் 2023 சீசனில் இருந்து வெளியேறினார்.
இப்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் கே.எல்.ராகுலுக்கு பதிலாக ரிஷப் பந்த் சேர்க்கப்படுகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
IPL 2025, Rishabh Pant named captain of Lucknow Super Giants, Pant LSG, LSG Captain Rishabh Pant