ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி: பஞ்சாப் கிங்ஸ் 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி
பஞ்சாப் கிங்ஸ் அணியை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
ராஜஸ்தான் அபார ஆட்டம்
மொகாலியில் நடைபெற்ற இந்த பரபரப்பான ஆட்டத்தில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் சஞ்சு சாம்சன் களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், 3 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்தார்.
அவருக்கு பக்கபலமாக ஆடிய சஞ்சு சாம்சன் 38 ஓட்டங்கள் சேர்த்தார். பின்னர் களமிறங்கிய இளம் வீரர் ரியான் பராக் தனது பங்கிற்கு 43 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.
Earphones lagao. Ek baar suno. Phirse suno. TAKKKK 💥 pic.twitter.com/dlYkqIzu3C
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2025
இறுதியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை குவித்தது.
தடுமாறிய பஞ்சாப் கிங்ஸ்
206 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
தொடக்க ஆட்டக்காரர் ப்ரியன்ஷ் ஆர்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
Halla 𝘉𝘰𝘸𝘭𝘦𝘥 x 2 🔥🔥 pic.twitter.com/U0uPu0zSd7
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2025
மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் 17 ஓட்டங்கள் எடுத்தார், ஸ்ரேயாஸ் ஐயர் 10 ஓட்டங்களும் நட்சத்திர வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் 1 ஓட்டமும் எடுத்து ஏமாற்றமளித்தனர்.
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், நேஹால் வதேரா அதிரடியாக விளையாடி 62 ஓட்டங்கள் குவித்து அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
ஆனால் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 155 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
Shuru se ant tak, ek hi bol - Halla Bol! 🔥🔥🔥 pic.twitter.com/bxnEo1OT3X
— Rajasthan Royals (@rajasthanroyals) April 5, 2025
நடப்பு ஐபிஎல் தொடரின் 17-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸை 50 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |