மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு! ஹர்திக் பாண்டியா விளக்கம்
2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை விளையாடும் முதல் போட்டியில் அந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் செயல்படுவார் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மும்பை அணியின் கேப்டன் சூர்யகுமார்
கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்துவீசாததால் அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.
ICYMI: सूर्या दादा will be the 𝐂𝐚𝐩𝐭𝐚𝐢𝐧 in our first game of the season. 🎤💙#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/U97SPsX4Mn
— Mumbai Indians (@mipaltan) March 19, 2025
சர்ச்சையில் சிக்கிய அந்த போட்டியானது கடந்த சீசனின் கடைசி போட்டி என்பதால், அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டின் மும்பை இந்தியன்ஸின் முதல் போட்டியில் இந்த நடைமுறையானது பின்பற்றப்பட உள்ளது.

பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்: அடுத்த 48 நாட்கள் என்ன நடக்கும்? டால்பின்களின் வரவேற்பு வீடியோ!
இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என ஹர்திக் பாண்டியா மற்றும் பயிற்சியாளர் மஹேல ஜெயவர்தனே ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் உறுதி செய்துள்ளனர்.
𝗦𝗞𝗬 (CAPTAIN) for our opening match 🆚 CSK ✨💙#MumbaiIndians #PlayLikeMumbai #CSKvMI pic.twitter.com/fSbtKgVrVV
— Mumbai Indians (@mipaltan) March 19, 2025
செய்தியாளர் சந்திப்பில், "இந்திய அணியின் கேப்டனாகவும் இருக்கும் சூர்யகுமார் யாதவ் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியை வழிநடத்துவார்" என்று தனது தடை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஹர்திக் பாண்டியா பதிலளித்தார்.
மேலும், கடந்த சீசனில் விதிக்கப்பட்ட தடை இந்த சீசனுக்கும் தொடர்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த பாண்டியா, "அது என் கட்டுப்பாட்டில் இல்லை. கடந்த ஆண்டு நடந்தது விளையாட்டின் ஒரு பகுதி, கடைசி ஓவரை முடிப்பதில் நாங்கள் சற்று தாமதமாகிவிட்டோம். அதன் விளைவுகள் அப்போது எனக்குத் தெரியாது. இது துரதிர்ஷ்டவசமானது, ஆனால் விதிகள் தெளிவாக உள்ளன. எதிர்காலத்தில் இந்த விதி திருத்தப்படுமா என்பது அதிகாரிகளின் முடிவு என தெரிவித்தார்.
"I'm lucky that I have three captains (Rohit, Bumrah & Surya) playing with me." - HP 🗿
— Mumbai Indians (@mipaltan) March 19, 2025
And we're lucky to have you all together! 💙#MumbaiIndians #PlayLikeMumbai pic.twitter.com/iLK2fGIQD7
பும்ரா அணியில் எப்போது இணைவார்?
தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) முதுகுவலி காயத்திலிருந்து ஜஸ்பிரித் பும்ரா குணமடைந்து வருவதால், அவர் அணியில் எப்போது இணைவார் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
பயிற்சியாளர் ஜெயவர்தனே கூறுகையில், "பும்ராவின் நிலை குறித்து என்சிஏவிடமிருந்து கருத்துக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார், விரைவில் அணியில் இணைவார் என்று நம்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |