மண்ணை கவ்விய KKR: 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் DC அபார வெற்றி
ஐபிஎல்லில் கொல்கத்தா அணியை வீழ்த்தி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
203 ஓட்டங்கள் குவித்த டெல்லி
ஐபிஎல்லின் 70 வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ஓட்டங்கள் குவித்தது.
டெல்லி அணியில் அதிகபட்சமாக கே.எல் ராகுல் 60 ஓட்டங்களையும் கேப்டன் அக்சர் படேல் 39 ஓட்டங்களையும் குவித்தனர்.
டெல்லி கேபிட்டல்ஸ் வெற்றி
204 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் கேப்டன் மற்றும் தொடக்க வீரரான ரஹானே அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 63 ஓட்டங்கள் குவித்தார்.

ஆனால் பின்னர் வந்த எந்த வீரரும் பெரிய ஓட்டங்களை குவிக்க தவறியதன் காரணமாக கொல்கத்தா அணி 18.4 ஓவர்கள் முடிவிலேயே 163 ஓட்டங்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் கொல்கத்தா அணியை 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |