டெல்லியின் விடாமுயற்சி: PBKS அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய DC
பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி கேபிட்டல்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த பஞ்சாப் கிங்ஸ்
ஐபிஎல் 2026 ஆம் ஆண்டின் 55 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 210 ஓட்டங்கள் குவித்தது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ப்ரியான்ஷ் ஆர்யா (56), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்(59), கூப்பர் கொனொலி(38) ஓட்டங்கள் குவித்தனர்.
டெல்லி கேபிட்டலஸ் அபார வெற்றி
211 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் முன்கள வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

ஆனால் பின்னர் வந்த கேப்டன் அக்சர் படேல் 56 ஓட்டங்களையும், அதிரடியாக விளையாடிய டேவிட் மில்லர் 28 பந்துகளில் 51 ஓட்டங்களையும் குவித்தனர்.
இறுதியில் டெல்லி அணி 19 ஓவர்கள் முடிவிலேயே 7 விக்கெட்டுகளை இழந்து 216 ஓட்டங்கள் குவித்தது.
இதன் மூலம் 3 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி டெல்லி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |