பெங்களூருவில் இல்லை..ஐபிஎல் 2026 இறுதிப்போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்
ஐபிஎல் 2026 தொடரின் இறுதிப்போட்டி பெங்களூருவில் இருந்து அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
பிசிசிஐ அறிவிப்பு
நடப்பு ஐபிஎல் தொடரின் தகுதிச்சுற்று-1, எலிமினேட்டர் மற்றும் தகுதிச்சுற்று-2 போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மே 26ஆம் திகதி அன்று தகுதிச்சுற்று-1 போட்டி தர்மசாலாவில் உள்ள HPCA மைதானத்தில் நடைபெறும்.
எலிமினேட்டர் போட்டி மே 27ஆம் திகதி புதிய சண்டிகரில் உள்ள புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும், தகுதிச்சுற்று-2 போட்டி மே 29ஆம் திகதியும் நடைபெற உள்ளன.
இறுதிப்போட்டி பெங்களூருவில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது அகமதாபாத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
வரம்பிற்கு அப்பாற்பட்டவை
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், "உள்ளூர் கிரிக்கெட் சங்கம் மற்றும் அதிகாரிகளிடம் இருந்து முன்வைக்கப்பட்ட சில கோரிக்கைகள், பிசிசிஐ-யின் நிறுவப்பட்ட வழிகாட்டுதல்கள் மற்றும் நெறிமுறைகளின் வரம்பிற்கு அப்பாற்பட்டவையாக இருந்தன.
இதன் காரணமாகவே, போட்டி நடைபெறும் இடம் மாற்றப்பட்டு, வேறொரு இடத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சில நிர்வாக மற்றும் தளவாட ரீதியான காரணங்களைக் கருத்தில் கொண்டு, டாடா ஐபிஎல் 2026-யின் Playoffs போட்டிகள் இந்த சீஸனில் ஒரு சிறப்பு நிகழ்வாக மூன்று வெவ்வேறு மைதானங்களில் நடத்தப்படும்" என தெரிவித்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |