89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் அபார வெற்றி: தொடரிலிருந்து வெளியேறியது CSK
89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய குஜராத்
இன்று நடைபெற்ற 2026 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 66 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது.

குஜராத் அணியில் சாய் சுதர்சன் 84 ஓட்டங்களையும், கேப்டன் சுப்மன் கில் 64 ஓட்டங்களையும், ஜாஸ் பட்லர் 57 ஓட்டங்களையும் குவித்து அசத்தியுள்ளனர்.
படுதோல்வியடைந்த சிஎஸ்கே
சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
சிவம் தூபே மட்டும் அதிரடியாக விளையாடி 17 பந்துகளில் 47 ஓட்டங்கள் குவித்தார்.

சொற்ப ஓட்டங்களில் வீரர்கள் ஆட்டமிழந்ததால் 13.4 ஓவர்கள் முடிவிலேயே சென்னை 140 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |