குஜராத் டைட்டன்ஸ் மிரட்டல்., பஞ்சாப்பை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி
பஞ்சாப் கிங்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய பஞ்சாப்
ஐபிஎல் 2026-ன் 46 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற குஜராத் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
HOW’S THAT FOR A START? 😮🔥
— Sporcaster (@Sporcaster) May 3, 2026
Mohammed Siraj rattles Punjab Kings in the very first over 👊💥
Priyansh Arya & Cooper Connolly back in the hut 😳🔥#TATAIPL #IPL2026 #GTvPBKS #GTvsPBKS pic.twitter.com/nStGJ4n4qT
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் அணி 8.4 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 47 ஓட்டங்களுடன் தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டொய்னிஸ்(40) மற்றும் சூர்யான்ஷ் ஷெட்கெ(57) நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.
இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 163 ஓட்டங்கள் குவித்தது.
குஜராத் அபார வெற்றி
164 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் தொடக்க வீரரான சாய் சுதர்சன் 41 பந்துகளில் 57 ஓட்டங்கள் குவித்தார்.
What a shot under pressure by Washington Sundar 🤯
— Indian Cricket (@IPL2025Auction) May 3, 2026
4 runs were needed in 2 balls and Sundar came up with a lap shot 🔥#GTvsPBKS pic.twitter.com/wQtI1X78JT
அவரை தொடர்ந்து பொறுப்புடன் விளையாடிய வாஷிங்டன் சுந்தர் 23 பந்துகளில் 40 ஓட்டங்கள் குவித்து குஜராத் அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.
குஜராத் அணி 19.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்கள் குவித்து இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் ஜேசன் ஹோல்டர் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |