77 ஓட்டங்கள் வித்தியாசம்: ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
பிரம்மாண்ட இலக்கு நிர்ணயம்
2026 ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 52 வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 229 ஓட்டங்கள் குவித்தது.

குஜராத் அணி சார்பில் சாய் சுதர்சன் 55 ஓட்டங்களும், சுப்மன் கில் 84 ஓட்டங்களும் , வாஷிங்டன் சுந்தர் 37 ஓட்டங்களும் எடுத்திருந்தனர்.
மிகப்பெரிய சறுக்கல்
230 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.
RR அணியில் அதிகபட்சமாக சூர்யவன்ஷி 36 ஓட்டங்களையும், ரவீந்தர ஜடேஜா 38 ஓட்டங்களையும் குவித்தனர்.

இருப்பினும் 16.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதன் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 77 ஓட்டங்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |