மும்பை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி: பிளே ஆப் கனவை தொடரும் KKR
மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
தடுமாறிய மும்பை இந்தியன்ஸ்
ஐபிஎல்லின் 65 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ரோகித் சர்மா 15, சூர்யகுமார் யாதவ் 15, பாண்டியா 26, திலக் வர்மா 20 ஓட்டங்கள் என குவித்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இதன் காரணமாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 147 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
பிளே ஆப் கனவை தக்க வைத்த கொல்கத்தா
148 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது.

சிறப்பாக விளையாடிய மனிஷ் பாண்டே 33 பந்துகளில் 45 ஓட்டங்களையும், ரோவ்மேன் பொவெல் 30 பந்துகளில் 40 ஓட்டங்களும் குவித்து அசத்தினர்.
இதன் மூலம் கொல்கத்தா அணி 18.5 ஓவர்கள் முடிவிலேயே 6 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த போட்டியில் வீழ்த்தியதன் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது பிளே ஆப் கனவை தக்கவைத்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |