பந்துகளை பறக்கவிட்ட சூர்யவன்ஷி: லக்னோவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி RR அபார வெற்றி
லக்னோ அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய LSG
ஐபிஎல்லின் 64 வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதல் பேட்டிங்கில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 220 ஓட்டங்கள் குவித்தது.
லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 96 ஓட்டங்களையும், ஜோஷ் இங்கிலிஷ் 60 ஓட்டங்களையும் குவித்து அசத்தினர்.
அபார வெற்றியை பதிவு செய்த RR
221 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று கடினமான இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் 43 ஓட்டங்களையும், வைபவ் சூர்யவன்ஷி 38 பந்துகளில் 93 ஓட்டங்களையும் குவித்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த துருவ் ஜுரெல் 53 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் ராஜஸ்தான் அணி 19.1 ஓவர்கள் முடிவிலேயே 3 விக்கெட் இழப்பிற்கு 225 ஓட்டங்கள் குவித்தது.
அத்துடன் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |