மும்பை இந்தியன்ஸ் காத்திருந்த அதிர்ச்சி: 244 ஓட்டங்கள் விரட்டி பிடித்த சன்ரைசர்ஸ்: அபார வெற்றி
மும்பை இந்தியன்ஸ் நிர்ணயித்த 244 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை எட்டிப் பிடித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸின் இமாலய இலக்கு
2026 ம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41 வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ஓட்டங்கள் குவித்தது.

மும்பை அணியில் அதிகபட்சமாக வில் ஜாக்ஸ் 22 பந்துகளில் 46 ஓட்டங்கள் குவித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரியான் ரிக்கில்டன் 55 பந்துகளில் 123 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
SRH-யின் மிகப்பெரிய வெற்றி
244 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது.

தொடக்க ஆட்டக்காரர்களான அபிஷேக் சர்மா 45 ஓட்டங்களும், டிராவிஸ் ஹெட் 76 ஓட்டங்களும் குவித்து மிரட்டினர்.
மேலும் ஹென்ரிட்ச் கிளாசன் அதிரடியாக விளையாடி அரைசதம்(30 பந்துகளில் 65 ஓட்டங்கள்) கடந்தார்.
இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.4 ஓவர்கள் முடிவிலேயே 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 249 ஓட்டங்கள் குவித்து அசத்தியது.

அத்துடன் மும்பைக்கு எதிரான இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றியையும் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |