சன்ரைசர்ஸ் அதிரடி: 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் தோல்வி
பஞ்சாப் கிங்ஸ் அணியை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் அதிரடி
2026 ஆண்டு ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 235 ஓட்டங்கள் குவித்தது.
சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக கிளாசன் 69 ஓட்டங்களும், இஷான் கிஷன் 55 ஓட்டங்களும் குவித்தனர்.

பஞ்சாப் தோல்வி
236 ஓட்டங்கள் என்ற மிகப்பெரிய இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 202 ஓட்டங்கள் மட்டுமே குவித்தது.
இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கூப்பர் கோனோலி 59 பந்துகளில் 107 ஓட்டங்கள் குவித்து அணியின் வெற்றிக்காக போராடினார். அதே சமயம் எதிர்முனையில் விக்கெட்டுகள் மலமலவென சரிந்ததால் பஞ்சாப் கிங்ஸ் இந்த போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |